டிரான் அலஸ் மீதான தாக்குதல் தேர்தல் பிரச்சார நாடகம்: விமல் வீரவன்ச
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் செயலாளர் டிரான் அலஸ் மீதான தாக்குதல் ஒர் தேர்தல் பிரச்சார நாடகமே என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது மக்களின் அனுதாபத்தை ஈட்டிக் கொள்ளும் நோக்கில் இந்த கைக் குண்டுத் தாக்குதல் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் மக்கள சமரவீர ஊடக அறிக்கை ஒன்றில் டிரான் அலஸின் பெயரைக் குறிப்பிடும் வரையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அப்படியான ஒர் நபரை அறிந்திருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டிரான் அலஸிற்கு கொலை அச்சுறுத்தல் காணப்படுவதாக மங்கள சமரவீர, தெரிவித்து 24 மணித்தியாலத்திற்குள் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply