ஜனாதிபதி வெற்றி பெற்றால் அரசியல் பழிவாங்களுக்கு இடமில்லை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்குப் பிறகு எதிரணியைச் சேர்ந்த எவரையும் நாங்கள் அரசியல் பழிவாங்கல் செய்யப்போவதில்லை என்று சுற்றாடல், இயற்கைவள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்றுகாலை நடைபெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சம்பிக்க மேலும் உரையாற்றுகையில்;
எதிரணிகள் கூறித்திரிவது போன்று நாங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லப் போவதில்லை. நாங்கள் 27 ஆம் திகதி வெற்றி பெற்ற பின்னர் ஒரு போதும் விமான நிலையத்தை மூடப் போவதுமில்லை. எனவே எதிர்க் கட்சியிலுள்ளவர்கள் விரும்பினால் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் செல்லும் பகுதி ஊடாக வெளிநாட்டுக்குச் செல்லலாம். அவ்வாறு செல்ல விரும்பாவிடின் தொடர்ந்தும் அமைதியான முறையில் இங்கு இருந்தவாரே தனது அரசியல் பணிகளை முன்னெடுக்கலாம் என்றார்.
சரத் பொன்சேகா, ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீர தொடக்கம் எதிரணியைச் சேர்ந்த எவரும் பழிவாங்கப்பட மாட்டார்கள். இதனால் வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாகவோ, மாற்று வழியையோ பயன்படுத்தத் தேவையில்லை என்றும் அமைச்சர் சம்பிக்க சுட்டிக்காட்டினார்.
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியாத, அதற்காக எதனையும் தனது கொள்கையாக கொண்டிறாத சரத் பொன்சேகாவை மக்கள் ஒருபோதும் தெரிவு செய்யப்போவதில்லை என்று தெரிவித்த அவர், ஜனாதிபதி அதிக வாக்குகளால் வெற்றி பெறுவது உறுதி என்றும் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply