வீரகேசரியின் பெயரில் போலிப் பிரசுரம்
வீரகேசரி பத்திரிகையின் இலச்சினை மற்றும் பெயருடன் பிரசுரமொன்று வெள்ளவத்தை மற்றும் சில பகுதிகளில் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் எமக்கு புகார் தெரிவித்துள்ளனர். மேற்படி துண்டுப்பிரசுரத்துக்கும் வீரகேசரி வெளியீட்டாளர்களான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென வீரகேசரி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
வீரகேசரியின் பெயரைப் பயன்படுத்தி போலியாக மேற்படி துண்டுப் பிரசுரம் வெளியிடப்படுகிறது என்பதை அறியத்தருகிறோம். மேற்படி பிரசுரம் எம்மால் வெளியிடப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply