எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜே.வி.பி. தலைமையில் புதிய கூட்டணி; அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை: சோமவன்ச
ஜே.வி.பி கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது கூட்டணி அமைத்து அதன் மூலம் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தமது கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தல்களின் போது அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி. தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது.
ஜனநாயகம், இடம்பெயர் மக்களுக்கு நிவாரணம் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தற்போது எதிர்க்கட்சி கூட்டமைப்பில் இணைந்து கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பாராளுமன்றத் தேர்தலின் போது தமது கொள்கைகளுக்கு ஏற்ற வகையிலான கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் ஊடாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சரியான ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை வழங்குவதன் மூலம் தமிழீழத்தை விடவும் கூடிய திருப்தியை மக்களுக்கு ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு சமத்துவம், ஜனநாயகம் மற்றும் சம உரிமை ஆகியவற்றை வழங்குவதன் மூலம் தமிழீழத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் அடையும் திருப்தியை விட கூடுதல் நலன்களை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ இராச்சியத்தில் ஜாதி அடிப்படையிலான வேறுபாடுகள் காணப்படுவதாகவும், ஜனநாயகம் சமத்துவம் ஆகியவற்றின் மூலம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளில் இவ்வாறான எந்தவொரு வேறுபாடும் காணப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply