இன்று 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் புலிகளின் பிடியிலிருந்து தப்பி ஓமந்தை வந்தனர்

வன்னியில் உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் புலிகளின் கட்டுக்காப்பையும் மீறி வெளியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இன்று (டிச. 02) காலை வன்னியில் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து 15 பொதுமக்கள் ஏ-9 வீதியூடாக ஓமந்தைச் சோதனைச் சாவடியை வந்தடைந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 13 ஆண்கள், 2 பெண்கள் அடங்கலாக 5 குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நெடுங்கேனியில் இருந்து வந்தவர்கள் எனவும் அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply