19 வருடங்களின் பின் புத்தளம் – மன்னார் வீதி திறப்பு

கடந்த 19 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுக் கிடந்த புத்தளம் – மன்னார் வீதி நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

105 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இப்பாதையை அபிவிருத்தி செய்ய 650 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டது.

மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் வீதி திறப்பு வைபவம் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக இளைஞர் படையணித் தலைவர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டார். மற்றும் வட மாகாண ஆளுநர் – பிரதியமைச்சர் கே. ஏ. பாயிஸ் ஆகியோர் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.

பாதை திறப்புக்குப் பின்னர் சுமார் 160க்கு மேற்பட்ட வாகனங்கள் மன்னாரை நோக்கி பயணமாகின.

இதேவேளை, புத்தளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலொன்று புத்தளம் நகர மண்டபத்தில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாமல் ராஜபக்ஷ உரையாற்றினார்.

இம்மாதம் 27ம் திகதி முதல் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் தீவிரமாக முன்னேடுத்துச் செல்லப்படும். இதன் பயனாய் பல இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply