இடம் பெயர்ந்தோர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்த செய்தியை வவுனியா அரச அதிபர் பி. எஸ். எம். சார்ளஸ் முழுமையாக நிராகரிப்பு

சுதந்திரமாக வெளியில் சென்று வர அனுமதி வழங்கப்பட்ட இடம் பெயர்ந்த மக்களில் சுமார் 31 ஆயிரம் பேர் தலைமறைவாகி உள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்த குற்றச்சாட்டை வவுனியா அரச அதிபர் பி. எஸ். எம். சார்ளஸ் முழுமையாக நிராகரித்தார்.

உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்றுவரும் அனுமதியைப் பயன்படுத்தி நாளாந்தம் 25 ஆயிரம் பேர் நலன்புரி முகாம்களுக்கு வெளியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்பொழுது ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்களே மெனிக்பாமில் உள்ளனர்.

இவர்களில் 25 ஆயிரம் பேர் மாறி மாறி விசேட அனுமதியுடன் வெளியில் சென்று வருகின்றனர். வெளியில் செல்லும் அனைவரும் திரும்பி வருகின்றனரென்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply