இணையத்தள பயன்பாட்டாளர்களுக்கு ஜெர்மனிய அரசு எச்சரிக்கை

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக உள்ளதை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து அதற்கு மாற்றாக வேறு இணைப்பைப் பயன்படுத்துமாறு ஜெர்மனிய அரசு அந்நாட்டு இணையத்தள பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுள் இணையத்தளங்களில் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் இணையத்தளங்களை சீனா திருடி வருவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து கூகுள் போன்ற இணையதள இணைப்பிற்கு செல்ல பயன்படுத்தும்.

இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் பலவீனமாக இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டது. எனினும் இணையத்தள பயன்பாட்டாளர்களுக்கு இதனால் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு. இணையத்தள பயன்பாட்டாளர்களுக்கு தீவிர அபாயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு, அமைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்தது.

இது குறித்து ஜெர்மன் நாட்டின் தகவல் பாதுகாப்பிற்கான பெடரல் அலுவலகம் அல்லது பி.எஸ்.ஐ. கூறியதாவது, ஜெர்மனியர்கள் எக்ஸ்புளோரரின் அனைத்து வெர்ஷன்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அதிகரித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தாக்குதல்கள் நடத்துவது என்பது சிறிது கடினமானது. ஆனால் முழுவதுமாக பாதுகாப்பு அளிக்காது எனவே இணையத்தளத்தை பயன்படுத்தும் ஜெர்மனியர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக வேறு பிரவுசரை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மைக்ரோசப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தாமஸ் பாம்கார்ட்னர் கூறுகையில், “ஜெர்மன் அரசின் எச்சரிக்கை குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. கூகுள் இணையத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறிப்பிட்ட நோக்குடன் பெரியளவில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள் சாதாரண மக்கள் அல்லது நுகர்வோர்களுக்கு எதிராக நடைபெறாது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply