தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதற்கு ஏற்பாடு

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியமை அடுத்து தேர்தல் ஆணையகத்தில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் ஊடங்களுக்கு அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தேர்தல்களைக் கண்காணிக்கவென அரசின் அனுமதிபெற்ற கபே மற்றும் பவ்ரல் ஆகிய அமைப்புகளின் பிரதிநிகள் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

வாக்களிப்பு நீதியாக இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரைக் கேட்டுக்கொண்டுள்ளதுடன் சுமூகமான வாக்களிப்புக்கு தேர்தல் பணியாளர்கள் பக்கசார்பற்று சுயாதீனமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதோர் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு காலையிலேயே சென்று வாக்களிக்குமாறும் தேவையற்ற வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு பிரதான வேட்பாளர்களுமே தேர்தல் வன்முறைகளுக்கு பதில்கூற கடமைப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்ததுடன் சுயாதீனமாக மக்கள் தமது எதிர்கால முடிவை எடுப்பதற்கான இத்தேர்தலில் அழுத்தங்களைப் பிரயோகிக்காது மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்கு உதவுமாறும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்த ஜனாதிபதித் தேர்தல் நீதியாகவும் நியாயதானதாகவும் நடைபெறுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தனது உயர்ந்தபட்ச அதிகாரங்களைப் பயன்படுத்த முன்வந்தமையையிட்டுத் தாங்கள் திருப்தியடைவதாகவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply