பாரிய வன்முறைச்சம்பவங்கள் எதுவும் இல்லாமல் வாக்களிப்பு நிறைவு
இன்றைய ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிடத்தக்க பாரிய வன்முறைச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் வாக்களிப்பு பிற்பகல் 4 மணிக்கு சுமூகமாக முடிவுக்கு வந்தது.
வாக்குக் கணக்கெடுப்பு மாலை 6 மணிக்கு தொடங்கு மெனவும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப் படுமென தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
காலையில் வாக்களிக்கும் நிலையங்களில் அதிகமாக பெண்கள் கூட்டம் காணப்பட்டதாகவும் ஆண்களின் வாக்களிப்பு மந்த நிலையில் இருப்பதை காணக்கூடியதாக இருந்ததாக பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது. மதியம் 12 மணி வரை சுமார் 50 விழுக்காடுகளுக்கு அதிகமாக மக்கள் வாக்களித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சுதந்திரமான தேர்தலைக் கண்காணிக்கும் அமைப்பான கஃபே இதுவரை 45 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலானவை கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த மாவட்டங்களுப் பொறுப்பான தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகர்கள் தங்களுக்கு இது சம்பந்தமான முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லையென்றும் அவை மிகச் சிறிய சம்பங்களாக இருக்கலாமெனத் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply