புனர்வாழ்வு முகாம்களில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம்

சிறப்பு புனர்வாழ்வு முகாம்களில் உள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்துள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் அவர்களுக்கு 13 வாக்களிப்பு மையங்களில் வாக்களிப்பினை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு புனர்வாழ்வு மையங்களில் உள்ள 3494 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

முதல் தடவையாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply