மட்டு. மாநகர மேயர் சிவகீத்தாவின் வீட்டின்மீது கைகுண்டுத் தாக்குதல்
மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீத்தா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மீது நேற்று சிலர் கைகுண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர். இக்குண்டுவீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன.
இதேபோன்று மேயருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரின் கணவனின் வர்த்தக நிலையம் என்பனவும் நேற்று உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவங்கள் இடம்பெற்ற போது மேயர் சிவகீத்தாவோ அல்லது அவரின் குடும்பமோ அங்கு தங்கி இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply