சம்பந்தன் எடுத்த `முடிவு`க்கு எதிராக கஜேந்திரன் அறிக்கை

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை கூட்டமைப்பு எடுக்க முக்கிய காரணமான சம்பந்தனின் அரசியல் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சே. கஜேந்திரன் வன்மையாக சாடியுள்ளார்.

சம்பந்தன் எடுத்த ‘முடிவு’ குறித்து சே. கஜேந்திரன் தன்னிலை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழர் தாயகப்பகுதிகளில் வாழும் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர், இதன் மூலம் நடைபெற்று முடிந்த தேர்தல் சிங்கள தேசத்திற்கான தேர்தல் அதில் தமிழ் தேச மக்களாகிய தாம் பங்கெடுக்கத் தேவை இல்லை என்பதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனரென தனது அறிக்கையில் குறிப்பிடும் கஜேந்திரன், 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புலிகளின் தலைமை பகிஸ்கரிக்கக் கோரியதை சம்பந்தன் அண்மையில் விமர்சனத்துக்குள்ளாக்கியதையும் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

75 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரித்ததன் மூலம் கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்று தேசியத் தலைமை எடுத்த முடிவை தாம் விரும்பியே நடை முறைப்படுத்தினார்கள் என்பதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளையே தமது ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதனையும் `சம்பந்`தப்பட்ட தரப்புக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனரென மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு `சம்பந்`தப்பட்ட தரப்பு என கஜேந்திரன் மறைமுகமாக சுட்டிக்காட்டுவது திருமலை தந்த இராயவரோதயம் சம்பந்தன் அற்றி வேறு யாரும் அல்ல.

`தனித்துவமான இறைமை` என்ற தேசியக் கொள்கைகளை முன்வைத்து உறுதியாக ஐனநாயக வழியில் போராடப்போவதாக செல்வராசா கஜேந்திரன் தனது அறிக்கையில் குறிப்பிடும் `தனி நாடு` சாத்தியமில்லை என்பதை இரா. சம்பந்தன் அண்மையில் பல பேட்டிகளில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம்.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply