அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு வாழ்த்து

தேர்தலில் அமோக வெற்றிபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் வாழ்த்துச் செய்தி யொன்றை அனுப்பிவைத்துள்ளது. மேற்படி மன்றத்தின் சார்பில் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் தலைவர் வி. கயிலாசப்பிள்ளை ஆகியோர் கையெடுத் திட்டு அனுப்பி வைத்துள்ள இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

தேர்தலில் தாங்கள் அடைந்திருக்கும் வெற்றியையொட்டி இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த நாட்டிலுள்ள சகல மக்களும் இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் கெளரவத்துடனும், சமத்துவத்துடனும் கூடிய சமாதான வாழ்வை, தங்கள் தாய்நாட்டில் மேற்கொள்ளுவதற்கு வசதியாக வளமான நாடாக இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானின் திருவருள் தங்களுக்குக் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.

எங்கள் மக்கள் பல வழிகளில் கஷட்டப்பட்ட வேளையில், அவர்களுக்கு மனிதாபிமான சேவைகளைச் செய்வதற்கு தாங்களும், தங்கள் அரசாங்கமும் எமக்குத் தந்த சந்தர்ப்பத்திற்கும் உதவிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், திருக்கேதீஸ்வர ஆலய சூழலை மேம்படுத்துவதற்காகவும், கட்டமைப்பு வசதிகளை அங்கு அமைத்துத் தருவதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தமையையும், சமூகசேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் திட்டத்திற்கமைய அங்கு முதியோர்களுக்கான இல்லமொன்று அமைத்துத் தருவதையும், புனர்வாழ்வு முகாமிலிருந்து மாணவ சிறார்கள் விடுதலை செய்யப்பட்டு வருவதையும் குறிப்பாகச் சொல்லலாம்.

எங்கள் மாமன்றத்தின் துணைத் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் கல்வி அமைச்சருக்கு விடுத்திருந்த வேண்டுகோளாக இந்து மாமன்ற கல்விக் குழு உறுப்பினரான யாழ். பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எஸ். மோகனதாஸ் பசில் ராஜபக்ஷ அவர்களிடம் வலியுறுத்திய விடயமாக யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமொன்றை அமைப்பது தொடர்பாக தங்களது மஹிந்தவின் சிந்தனை தொலைநோக்கு தேர்தல் விஞ்ஞானபனத்தில் குறிப்பிட்டிருப்பதை மெச்சுகின்ற அதேவேளையில் அதனை உடனடியாக நிறுவுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

வடக்கு, கிழக்கு இளைஞர்களை கல்வித் துறையில் முன்னேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதன் அவசியத்தையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். யாழ். பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், பட்டதாரி மாணவர்களுக்குரிய விடுதி வசதிகளும் உடனடியாகத் தேவைப்படுகிறது. இது தொடர்பாகவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதுடன், வடக்கு கிழக்கு இளைஞர்களின் வளமான எதிர்காலத்திற்கும் ஆவன செய்வீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

அரசியல் சார்பற்ற சமய நிறுவனமான எங்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பாக, தாங்கள் இந்நாட்டு மக்களுக்கு வழங்கும் சகல மனிதநேய சமூகநலத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கிவருவோம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply