பொன்சேகாவின் எதிர்காலம் குறித்து அமெரிக்கா ஆர்வம்

ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை விட ஜெனரல் பொன்சேகா பற்றிய செய்திகளே சூடு பிடித்துள்ளது. அமெரிக்கா சரத் பொன்சேகாவின் எதிர்காலம் பற்றி கேட்டுள்ளதாம். அவர் தனது எதிர்கால திட்டத்தினை கூறினால் அல்லது ஏதாவது உதவிகள் தேவை என்றால் தாம் செய்ய விரும்புவதாக அமெரிக்கா சரத் பொன்சேகாவை கேட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தை சேர்ந்த டேவிட் குரோலி தெரிவிக்கையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊடாக தாம் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு பற்றியும் அறிய விரும்பிதாக கூறியுள்ளார். மேலும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடயம் தொடர்பில் நிலைமையினை அவதானித்து வருவதாகவும் கூறியுள்ளார் டேவிட் குரோலி.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply