தேர்தல் முடிவுகள் தமிழ், முஸ்லிம் மக்களை அரசு வென்றெடுக்க வேண்டுமென்பதையே புலப்பட்டுத்துகிறது: வாசுதேவ நாணயக்கார

ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையா அல்லது போலியானவையா என்பதனை ஆராய்வதனை விடவும் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பு தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் மூலம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நிலவி வரும் ஐயப்பாடு தெளிவாக புலப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழ் முஸ்லிம் மக்களை அரசாங்கத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களையும் அரசாங்கத்துடன் இணைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டமைப்பு அரசாங்கம் ஓர் புதிய ஆரம்பத்தை நோக்கிச்செல்ல வேண்டுமென வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply