முல்லை ஆசிரியர்கள் வவுனியா அலுவலகத்தில் வேதனம் பெறலாம்
முல்லைத்தீவு கல்வி வலயப் பாடசாலைகளில் கடமையாற்றி தற்போது யாழ் மாவட்ட பாடசாலைகளில் தற்காலிக இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தமது வேதனத்தை வவுனியா மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் முல்லைத்தீவு வலயக் கல்வி காரியாலயத்தில் பெற்றுக் கொள்ளலாமென வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் வீ. இராசையா தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டதற்கான கடிதம் தற்காலிக இணைப்பை பொறுப்பேற்றுக்கொண்டமைக்கான கடிதம் மற்றும் லீவு தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை இவை மூன்றும் வேதனம் பெற்றுக்கொள்ள முன்சமர்ப்பிக்க வேண்டுமென பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply