புதிய பிரதம பாதுகாப்பு அதிகாரியாக தயா ரத்நாயக்க

மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க பிரதம பாதுகாப்பு அதிகாரியாக ( Chief of Staff of the Sri Lanka Army) நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புனர்வாழ்வு ஆணையாளராக மேஜர் ஜெனரல் தயாரத்நாயக்க முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.

புலிகள் இயக்கத்திலிருந்து படையி னரிடம் சரணடைந்தவர்களுக்கு புனர் வாழ்வளிக்கும் நடவடிக்கைகள் இவரது தலைமையின் கீழேயே நடைபெற்று வந்தன.

வவுனியா நலன்புரி நிலையங்களில் இடம் பெயர்ந்துள்ள மக்கள் மற்றும் சரணடைந்துள்ள புலிகளின் புனர்வாழ்வு முகாம்களுக்கு பொறுப்பாக மேஜர் ஜெனரல் தயாரத்நாயக்க இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில காலம் இராணுவத்தின் ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply