அரசியல் தலைமைகள் மற்றும் போராளிக் குழுக்களின் தீர்மானங்கள் மக்கள் மீது திணிக்கப்படுவதை தவிர்க்க யாழில் அழுத்தக் குழு

இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் தங்களது எதிர்காலத்தையும் வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு சமூக ஆர்வலர்களால் அழுத்தக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் தலைமைகள் மற்றும் போராளிக் குழுக்களின் தீர்மானங்களே தம் மீது திணிக்கப்பட்டதாகவும் அப்படியான செயற்பாடுகள்தான் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்று இந்த அழுத்தக் குழுவினர் கூறுகிறார்கள்.

இந்தக் குழுவில் எதிர்வரும் காலத்தில் முஸ்லிம் மக்களையும் இனைத்துக் கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு பகுதியில் சிறுபான்மையினர் தொடர்பான அரசியல் மற்றும் அபிவிருத்தி பணிகளில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது சமூக மட்டக் குழுக்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோருகிறார்கள்.

இந்த அழுத்தக் குழுவில் பல்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளார்கள். வடபகுதியில் இருக்கும் அனைத்து மாவாட்டங்களில் இருந்தும் பலர் இந்த அழுத்தக் குழுவில் இணைந்துள்ளனர்.

யாழ்மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் தவரட்ணம் அவர்களின் தலைமையில் இந்த அழுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply