வவுனியா – மதியாமடுவில் 300 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் கீழ் வவுனியா மதியாமடு பிரதேச மக்கள் இவ்வாரத்தில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளதையடுத்து அப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இவ்வாரத்திற்குள் அப்பகுதியில் மீள்குடியேற்றம் இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.

மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் இன்று ஆயிரம் பேர் பூநகரியில் மீள்குடியேற்றம் செய்யப்படவு ள்ளமையும் குறிப்பிடத்தக்கது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply