அரசியல் விளையாட்டும் விளையாட்டு அரசியலும்
தமிழ் கூட்டமைப்பு வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் `சமஸ்டி` கோரிக்கையை அரசியல் தீர்வாக முன்வைத்து வடக்கு கிழக்கில் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒரு `அரசியல் விளையாட்டை` மீண்டும் ஆரம்பித்துள்ளது. கூட்டமைப்பின் இந்த அரசியல் விளையாட்டு எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானது என்பதை இந்திய உபகண்ட அரசியலின் புதிய யதார்த்தை ஓரளவு உள்வாங்கியவர்கள்கூட அனுமானிக்க முடியும்.
அத்துடன், புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் முற்றாக அழிந்து போன நிலையில் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டை தீர்மானம் போன்றவற்றின் மிகச்செயற்கையான சமகால முக்கியத்துவம் `புதிய உலக ஒழுங்கு` குறித்த தெளிவின்மையில் புலம் பெயர் தமிழர்கள் இன்னும் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. புலம் பெயர் தமிழர்களின் `விளையாட்டு அரசியல்` தாயகத்தில் இருக்கும் தமிழ் மக்கள் வட்டியும் முதலுமாக பாரிய விலைசெலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய அரசியல் சூழலுக்குள் மீண்டும் விழுவதற்கான நிகழ்தகவை அச்சம் தரும் வகையில் இன்னும் அதிகரித்துள்ளது.
`இணக்கமா அல்லது பிணக்கமா` (Deal or Nodeal) எனும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை முக்கியமாக இன்றைய `தமிழ் தேசியத் தலைமைகள்` விளையாடிப் பார்ப்பதற்கு வசதியாக டொலரில் இருக்கும் பரிசுத் தொகைகள் அரசியல் இலக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.
750,000: (வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கமைய) தனிநாடு
500,000: (கூட்டமைப்பின் பழைய கோசமான) சுயாட்சி
400,000: ( கூட்டமைப்பின் புதிய கோசமான ஐக்கிய இலங்கைக்குள்) சமஷ்டி
200,000: (வடக்கு கிழக்கு இணைந்த) மாகாணசபை
100,000: (காணி/பொலிஸ் அதிகாரங்களுடன்) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
75,000 (பொலிஸ் அதிகாரங்களுடன்) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
50,000 (காணி அதிகாரங்களுடன்) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
25,000 (தற்போதுள்ளதை விரிவுபடுத்தி) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
10,000: (தற்போதுள்ளதை செழுமைப்படுத்தி) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
5,000: (தற்போதுள்ளதை முழுமையாக) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
1,000: (தற்போது நடைமுறையிலுள்ள) வடக்கு/கிழக்கு இரு மாகாணசபைகள்
750: (ஜே.ஆர்-அமிர் காலத்து) மாவட்ட சபைகள்
500: மாநகர சபைகள்
400: நகர சபைகள்
300: கிராம சபைகள்
200: தமிழ் மொழியை உயர் நிலைப் பாடசாலைகளில் கைவிதல்
100: தமிழ் மொழியை இடை நிலைப் பாடசாலைகளில் கைவிடுதல்
75: தமிழ் மொழியை ஆரம்ப பாடசாலையில் கைவிடுதல்
50: தமிழ் மொழியை முற்றாக கைவிடுதல்
25: தமிழர் கிழக்கை விட்டு வெளியேறுதல்
10: தமிழர் வடக்கை விட்டு வெளியேறுதல்
5: தமிழர் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறுதல்
1: தமிழர் இலங்கையை விட்டு வெளியேறுதல்
0.01: தமிழர் உலகத்தை விட்டு வெளியேறுதல்
மூலம்/ஆக்கம் : TELOnews
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply