நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வீ.பி.) சனிக்கிழமை தீர்மானம்
வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து எதிர்வரும் சனிக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தீர்மானிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் தீர்மானிக்கப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சரும், கட்சித் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ள உள்ளதாகவும், இந்தக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உயர்பீடம் கூடிய ஆராய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும், சந்திப்பின் பின்னர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், பெரும்பான்மையான தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுயதீனமாக போட்டியிடுவதனையே விரும்புவதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply