இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவராக அசோக தொரதெனிய நியமனம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக தொரதெனிய நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதியை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. பெற்றோலிய இறக்குமதி தொடர்பாக வர்த்தக வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஹெட்ஜிங் ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவரை அப்பதவியில் இருந்து உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

புதிய தலைவராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக தொரதெனியவை நியமிக்கப்படுவது தொடர்பில் எழுந்த சிக்கல் நிலையை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்கள் குழு புதிய நியமனத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply