வடக்கின் வசந்தம் திட்டங்களுக்கு வவுனியா மாவட்டத்திற்கு ரூ200 மில்.
வவுனியா மாவட்டத்தில் முன்னெடு க்கப்படும் “வடக்கின் வசந்தம்” திட்டங்களுக்கென 2010ம் ஆண்டுக்காக 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய முதற்கட்டமாக இத்தொகை வவுனியாவுக்கு கிடைத்துள்ளதாக வவுனியா அரச அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வீதிகள் அபிவிருத்தி, குளங்கள் புனரமைப்பு, பாடசாலைகள் அபிவிருத்தி, சுகாதாரத்துறை மேம்படுத்தல், சனசமூக அபிவிருத்தி, ஆலயங்கள் புனரமைப்பு, உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுக்கென இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
மேலும் கமநெகும, மகநெகும, போன்ற திட்டங்கள் முன்னெடுப்பதற்கான நிதியும் 2010 ஆம் ஆண்டுக்கென வழங்கப்படும்.
வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக் கென இதுவரை கடந்த ஆண்டு 6000 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதுடன், 2010ம் ஆண்டு வவுனியா நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் “வவுனியா நவீன நகர்” திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அரச அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply