மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஓர் இந்தியர்
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை வழிநடத்தியவர், ஓர் இந்தியர் என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், ஒரு தனியார் டெலிவிஷன் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை வழிநடத்தியவர் ஓர் இந்தியர் என்று பல மாதங்களாக எங்களுக்கு தெரியும். ஆனால் அவரது உண்மையான அடையாளம் தெரியவில்லை. இந்தியர் என்றால், அவர் இந்திய குணாதிசயங்களை பெற்றவராக இருக்கலாம்.
இந்தியாவுக்குள் ஊடுருவி, நீண்ட காலமாக இங்கேயே தங்கி இருந்து இந்தி வார்த்தைகளை கற்றுக்கொண்டவராக இருக்கலாம். அல்லது, இந்தியாவில் இருந்து வெளியேறி பாகிஸ்தானுக்கு சென்று, அங்குள்ள தீவிரவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும் இருக்கலாம்.
அவர் பெயர் அபு ஜிண்டால் என்று நாங்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் அது அவரது உண்மையான பெயர் அல்ல. அவரது குரல் மாதிரி கிடைத்தால்தான், அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியும். ஆனால் குரல் மாதிரியை பாகிஸ்தான் அளிக்காது.
அபு ஜிண்டால், அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என்று ஊகங்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால், உள்துறை மந்திரியான நான், அதுபோல ஊகங்களை சொல்ல முடியாது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
யார் அவர்?
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் அபு ஜிண்டால் என்று கருதப்படுகிறது. அவரது உண்மையான பெயர், சையது சபியுதின் அன்சாரி. அவர் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர். அவுரங்காபாத் ஆயுத வழக்கிலும், குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கிலும் அவர் தேடப்பட்டு வருகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply