அவசரகாலச்சட்டம் 87 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

நாட்டில் மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசர காலத்தை நீடிக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று 87 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பமானது. இந்த அமர்வின் போது பிற்பகல் 3.30 மணியளவில் அவசரகாலச் சட்டம் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்களிப்பு இடம்பெற்றது.

இதன் போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்து கட்சிகளும் அவசரக்காலச் சட்டத்திற்கு ஆதரவகாக வாக்களித்தன. இதன் போது 102 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தது. இதன் போது 13 வாக்குகளும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற செல்லச்சாமி ஆகியோர் எதிராக வாக்களித்த 15 வாக்குகள் எதிராக வழங்கப்பட்டது.

இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரசன்னமாகியிருந்து எதிர்கட்சிகளின் பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரோ ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பை பதிவு செய்துகொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பின் போது மக்கள் விடுதலை முன்னணி சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. முடிவில் 87 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply