தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபடும்படி குடும்பத்தினர் வற்புறுத்தினர்: பாகிஸ்தான் சிறுமி பிபிசிக்கு வாக்குமூலம்

தற்கொலை குண்டுதாக்குதல்கள் வாடிக்கையாகி வரும் பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணப்பகுதியிலிருந்து ஒரு பஷ்டூன் இனச் சிறுமி, தன்னைத் தற்கொலைக் குண்டுதாரியாகுமாறு நிர்ப்பந்தித்த தனது குடும்பத்தினரிடமிருந்து தப்பி வந்து தனது கதையை பிபிசியிடம் கூறியிருக்கிறார்.

இவரது கருத்துக்களை பக்கச்சார்பற்ற வகையில் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், பாகிஸ்தான் போலிசார் இவரது இந்தக் கதை உண்மையாக இருக்கக்கூடும் என்று தாங்கள் நம்புவதாகவும், அவர் அளிக்கும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை என்றும் கூறுகின்றார்கள்.

“நீ தற்கொலை குண்டுதாரியாகி இறந்தால், எங்களை விட முன்னதாக சொர்க்கத்துக்கு போவாய்” என்று அந்தப் பெண்ணின் சகோதரனும் தந்தையும் கூறியுள்ளனர்.

இவரது இளைய சகோதரியும் இந்த மாதிரி தற்கொலை குண்டுதாரியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பாகிஸ்தான் சிறுமி வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் குறித்து இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சியில் கேட்கலாம்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply