அரசியல் தீர்வுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடக வியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 30 வருட காலமாக தமிழ், முஸ்லிம் மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்கள், அகதி வாழ்விற்கு முடிபு கட்டி அவர்களுக்கு நிம்மதியான வாழ்வு ஒன்றினை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.யுத்தத்தினால் அழிவுற்ற அம்மக்களின் பிரதேசங்களை மீளக்கட்டி எழுப்பி அபிவிருத்தி அடையச் செய்ய எல்லா வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
இதற்கு எமது கட்சி இந்த அரசாங் கத்துடன் இணைந்து செயற்படும் என்றும் கூறினார்.சிறுபான்மை சமூகங்களின் எதிர்பார்க்கும் தீர்வுத் திட்டம் ஒன்றை பெற்றுக் கொடுக்க எங்களினால் ஆன சகல முயற்சிகளை எமது கட்சி மேற்கொள்ளும் என ரிச்சாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply