யுத்தம் முடிவடைந்தும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை

யுத்தம் முடிவுக்கு வந்துவிட்ட போதும்  தேசியப் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என அரசியல் சாசன அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அவசர காலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் சாசன மாற்றமொன்றை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சாசனம் பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிகோலியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இனவாதத்தை து}ண்டும் வகையில் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை என குற்றம் சுமத்துவதன் ஊடாக இனவாதத்தை விதைக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதிகளவான தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன அடிப்படையில் இனவாதப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply