அமெரிக்க இறைச்சிக் கோழிக்கு சீனா கூடுதல் வரி

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக் கோழிக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் இறைச்சிக் கோழிகளின் விலையை விட, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக் கோழிகளின் விலை மிகவும் குறைவாக இருப்பதால், வியாபாரிகள் அதனையே பெருமளவு இறக்குமதி செய்து இருப்பு வைத்துக் கொள்கின்றனர்.

இதனால் சீனாவின் உள்ளூர் கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக அரசிடம் முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்தே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக் கோழிக்கு 105.4 விழுக்காடு வரை வரி விதிக்கப்போவதாகவும், இதன் மூலம் உள்ளூர் உற்பத்தி இறைச்சிக் கோழியுடன், இறக்குமதி இறைச்சிக் கோழியின் விலை சம அளவில் இருக்கும் என்றும் சீன வர்த்தக துறை அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் வரி விதிப்பு வருகிற இம்மாதம் 13ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சீனாவின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்காவுடனான உறவில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள மோதலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா நேற்று வெளியிட்ட அறிவிப்புமே காரணம் என்று கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply