ரணில் – சரத் இடையே `தேர்தல்` இணக்கப்பாடு எட்டப்படவில்லை!

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்மானம் எதுவுமின்றி முடிவடைந்ததாகத் தெரியவருகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதித் தலைவராக அந்த முன்னணியில் இணைத்துக்கொள்வதற்காக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஐக்கிய தேசிய முன்னணியினர் முன்வைத்த யோசனைகளை சரத் பொன்சேகா நிராகரித்துள்ளதுடன் அதுகுறித்து ஜே.வி.பியுடனும் பேசவேண்டுமெனக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், என்ன காரணத்திற்காக மனோ கணேசன் வெளியேறிச் சென்றார் எனத் தெரியவரவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply