ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை
சிறுவர்களை படையில் சேர்த்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அண்மையில் தம்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என தேச நிர்மான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமது ஆதரவாளரான இனிய பாரதியின் கட்டளையின் பேரில் சிறுவர்கள் படையில் இணைத்துக் கொள்ளப்படுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்ட தமக்கு சிறுவர்களை படைக்கு அமர்த்த வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர் போராளிகள் மற்றும் ஆயுத முரண்பாடு குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி மேஜர் ஜெனரல் பெற்றிக் கெம்ராட்டை தாம் சந்தித்து இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவு படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனியபாரதி அம்பாறை பிரதேசத்தில் ஜனாதிபதியின் இணைப்பாளராக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இனியபாரதி போட்டியிடுவார் எனவும் அமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply