ஏப்ரல் 8ல் பொதுத் தேர்தல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படக் கூடுமென கொழும்பு ஆங்கில ஊடகமான `டெய்லி மிரர்` இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இறுதிப் பாராளுமன்ற அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தற்போது ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாளைய தினம் பாராளுமன்றம் கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply