மீள் குடியேற்றம் சில வாரங்களுக்குள் பூர்த்தியாகும்

வன்னியில் யுத்தத்தினால் இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் இன்னும் ஒரு சில வாரங்களில் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஜனாதிபதி ஆலோசகர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்திற்கு அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இதுவரையில் 210000 இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், இன்னமும் 70000 இடம்பெயர் மக்கள் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த 70000 பேரும் விரைவில் மீள் குடியேற்றப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏ‐9 மற்றும் ஏ‐32 பாதைகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply