அலம்பில் கடற்புலித்தளப் பகுதிக்குள் இராணுத்தினர்
வன்னியை விடுவிக்கும் படைநடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 59வது படைப்பிரிவினர் கடற்புலிகளின் மிக முக்கிய தளமான அலம்பில் பகுதிக்குள் இன்று நுளைந்துள்ளனர். இது வன்னியை விடுவிக்கும் பநைடவடிக்கையின் மிக முக்கிய மைல்கல்லாகும்.
கடற்புலிகளின் மிக முக்கிய தளமான அலம்பில் முல்லைத்தீவுக்கு வடகிழக்காக 10கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
அலம்பில், வடக்கையும் கிழக்கையும் இனைக்கும் கடல் வினியோகத் தளமாக எல்ரிரிஈயினர் பயன்படுத்திவந்தனர். படையினர் இப்பகுதிக்குள் சென்றுள்ளதால் முல்லைத்தீவுக் கடலில் புலிகளின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவரப்படும் எனபதில் சந்தேகமே இல்லை.
மேலும் எல்ரிரிஈயினரின் ஆயுதம் கடத்தல், கடற்புலிப்பயிற்ச்சி என்பன பயங்கரவாதிகளால் சுதந்திரமாக இனிமேல் செய்யமுடியாது.
படையினர் அலம்பிலைக் கைப்பற்றியது எல்ரிரிஈயினருக்கு ஏற்பட்ட பேருழப்பாகும்.எல்ரிரிஈயினர் முல்லைத்தீவுப்பகுதி ஆழுமை மேலும் கேள்விக்குறியாக உள்ளது என பாதுகாப்பு ஆயவாளர்கள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply