வன்னி மாவட்டங்களில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள் மீண்டும் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த 07.01.2010 அன்று கிளிநொச்சியில் சுமார் ஐநூறு பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பேருந்துப் பணியாளர்கள் கலந்து கொண்ட கூட்டங்கள் நடந்துள்ளன. இந்தக் கூட்டங்களில் புதிய நிர்வாகக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர்கள் ஒன்றிணைந்த நிலையில் ஒரே பேருந்து உரிமையாளர் சங்கமாக இயங்கியது இந்தச் சங்கம். இப்போது அரச நிர்வாக முறைப்படியான பதிவுகளுக்கு வசதியாக தனித்தனி மாவட்டங்களின் அடிப்படையில் தனித்தனிச் சங்கங்களாகப் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் தலைவராக திரு. தங்கராசா ஜெகதீஸ்வரனும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் தலைவராக திரு. சி. விநோதராசாவும் (அப்பன்) தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சங்கங்களின் முதற்கட்ட நடவடிக்கையாக போர்நடந்த பிரதேசங்களில் கைவிடப்பட்ட வாகனங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சாரதிகளான ஐநூறு பேருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு விரைவான நடவடிக்கை எடுத்தல், புதிய சாலைப் பதிவுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை செயற்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply