காணாமல் போன ஊடகவியலாளர் தொடர்பில் விரைவில் தகவல் அம்பலம்
காணாமல் போயுள்ள லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஊடகவியலாளர் பிரகீத் எகனலியகொட தொடர்பிலான தகவல்கள் விரைவில் அம்பலமாகும் என ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தக் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விரைவில் தகவல்களை வெளியிட முடியும் என காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
பிரகீத் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளாரா அல்லது அவரே தலைமறைவாகியுள்ளாரா என்பது குறித்து அரசாங்கத்திற்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
லங்கா ஈ நியூஸ் இணைய தளம் அரசாங்கத்திற்கு எதிரான போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்ட போதிலும் அதன் ஆசிரியரையோ அல்லது பிரகீத்தையோ அரசாங்கம் கைது செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் குறித்த இணைய தளம் அரசாங்கத்திற்கு எதிரான வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்ததது.
குறித்த ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply