மன்னார், வவுனியா வைத்தியசாலைகளில் விசேட பாதுகாப்பு

பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து வவுனியா வைத்தியசாலைக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளன. வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
மட்டக்களப்பில் சிங்கள வைத்தியர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கில் பணியாற்றி சிங்கள வைத்தியர்கள் வெளியேறியிருந்தனர். வைத்தியர்களுக்கு 5 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க அரசாங்கம் முன்வந்தைத் தொடர்ந்து அவர்கள் இன்று வியாழக்கிழமை முதல் பணிகளுக்குத் திரும்புகின்றனர்.

இதனை முன்னிட்டு வவுனியா வைத்தியசாலையில் நேற்று முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிரந்தரமான பொலிஸ் சோதனை நிலையம் வைத்தியசாலையின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டிருப்பதுடன், சந்தேகத்துக்கிடமானவர்கள் சோதனை நிலையத்தில் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

வவுனியா வைத்தியசாலையில் 13 சிங்கள வைத்தியர்களும், 9 சிங்கள தாதிமாரும் பணியாற்றுகின்றனர். மட்டக்களப்பு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து வெளியேறியிருந்த அவர்கள் இன்று பணிக்குத் திரும்பியுள்ளனர்.

இதேவேளை, மன்னார் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய 6 வைத்தியர்களும் பணிக்குத் திரும்பும் பட்சத்தில் வைத்தியாலைக்கும், அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுமென அண்மையில் மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சென்றிருந்த விசேட பொலிஸ் குழு உறுதிமொழி வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply