எஸ்எல்பிசி ஊடாக மீண்டும் பிபிசி-தமிழோசை
பிபிசி-தமிழோசை ஒலிபரப்பானது நீண்டகாலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (எஸ்எல்பிசி) ஊடாக பரிவர்த்தனை ஒலிபரப்பு செய்யப்பட்டபோதும் கடந்தகால உள்நாட்டு மோதல்களின் போது, சில வருடங்களுக்கு முன், பல்வேறு காரணங்களினால் நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது, உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக பிபிசி-தமிழோசை ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ள பிபிசியின் தமிழ் மற்றும் சிங்கள ஒலிபரப்புகள் தொடர்பாக இன்று காலை இரு தரப்பினரிடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பாக அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்கவும் பிபிசி சார்பாக அதன் தெற்காசிய பணிப்பாளர் மிஷைல் ரோபலும் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply