’புழுகை’ இன்னும் நிறுத்தாத ‘புலன்’ பெயர்ந்த ’தமிழ்’ ஊடகங்கள்

யாழ்ப்பாணம் இருபாலை பெரியகுளத்தில் சடலங்களாக மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவனினதும் மாணவியினதும் மரணங்கள் தொடர்பாக ‘புலன்’ பெயர்ந்த ’தமிழ்’ ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக மரணமாணவர்களின் பெற்றோர் கடும் விசனத்தை வெளியிட்டுள்னர்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் பெற்றோர் வவுனியா அகதி முகாமில் இருப்பதாகவும் மாணவன் அவயவத்தை இழந்தவர் என்பதுடன் எவ்வித உதவியுமற்ற நிலையில் தாம் தற்கொலை செய்துகொள்வதாக எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேற்படி செய்திகள் ‘புலன்’ பெயர்ந்த ’தமிழ்’ இணையங்களில் முதலில் வெளிவந்ததுடன் வழமைபோலவே உள்ளுர் பத்திரிகைகள் அதனை அப்படியே `வெட்டி ஒட்டி` பிரசுரித்திருந்தன.

ஆயினும் தமது மரணத்திற்கு தாமே காரணம் என்ற விடயம் மட்டுமே அக்கடிதத்தில் காணப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது. மேலும் மாணவன் விக்டர் அருள்தாஸின் (வயது-21) பெற்றோரான ரவீந்திரதாசன் தம்பதியினர் திருநெல்வேலியிலும் மாணவி திருவிழியின் (வயது-21) தாயாரான திருமதி வேலாயுதம் மட்டக்களப்பிலும் வசித்து வந்துள்ளனர்.

‘புலன்’ பெயர்ந்த ’தமிழ்’ இணைய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போல அவர்கள் அகதி முகாமில் வசிக்கவில்லை என்பதுடன் பெற்றோரே நேரடியாக உடல்களை பொறுப்பேற்றும் உள்ளனர்.

இந்நிலையில் மரணமடைந்த தமது பிள்ளைகள் தொடர்பாக ஊடகங்களில் வெளியான மேற்படி செய்திகள் குறித்து பெற்றோர் கடும் விசனத்தை தெரிவித்துள்ளதுடன் கவலையும் அடைந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இருவரினதும் உடல்கள் யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள விக்டர் அருள்தாஸின் இல்லத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் மாணவனின் நல்லடக்கம் யாழில் இடம்பெற்றுள்ளது. மேலும் மாணவி வேலாயுதம் திருவிழியின் உடல் தாயாரினால் பொறுப்பேற்கப்பட்டு மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பெருமளவு பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் கூடவே சென்றுள்ளனர்.

நேற்றுமாலை மட்டக்களப்பு கிரானில் மாணவி வேலாயுதம் திருவிழியின் நல்லடக்கம் இடம்பெற்றுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply