இந்தியப் பிரதமரைச் சந்தித்தது தமிழக முதல்வர் தலைமையிலான குழு

இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழகத்தின் அனைத்துக் கட்சி குழு இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துள்ளன.
 
இலங்கையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு, அப்பாவித் தமிழர் மக்கள் கொல்லப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும் என முதல்வர் தலைமையிலான குழு கோரிக்கை விடுத்தது,

அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்படுவது நிறுத்தப்படுவதுடன், போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படுவதற்கான அழுத்தத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கவேண்டுமென பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை விடுக்கவும் கடந்த கடந்த மாதம் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் முடிவெடிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்று வியாழக்கிழமை பிரதமரைச் சந்தித்த தமிழக கட்சிகளின் தலைவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்தனர். புதுடில்லி சென்றிருக்கும் இந்தக் குழுவினர் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

கடந்த வாரம் தமிழக நாடாளுமன்றக் குழுவினர் இந்தியப் பிரதமரைச் சந்தித்து, இலங்கையில் போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக இந்தியப் பிரதமரும் உறுதிமொழி வழங்கியிருந்தார்.

பிரதமரைச் சந்தித்த குழுவில், தி.மு.க. பிரதிநிதிகளைத் தவிர, காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் சுதர்சனம், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தி.க. தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் அங்கம் வகித்திருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply