பொன்சேகாவின் கைது இராணுவத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இராணுவத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றவே சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது குற்றமில்லாவிட்டால் அவர் வெகு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா கைது குறித்துப் பேசச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

அவர் விசாரணைக்கெனத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் அவருக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவ பொலிசாரால் தாம் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக சரத் பொன்சேகா உயர்நீதிமன்றம் செல்லச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply