மஹிந்தவின் அழைப்பிற்காக காத்திருக்கின்றோம்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் தாம் அழைக்கப்பட்டால் மக்களின் தேவை கருதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்தபோதே துரைரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்பேசும் மக்களின் நலன் கருதியே நாம் பல முக்கிய தீர்மானங்களை எடுத்து வருகிறோம். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பிலும் எமது மக்களின் நலனையே முதன்மையாக நோக்குகிறோம். ஆகவே, உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நிகழ்ச்சித் திட்ட அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply