கூட்டமைப்பு தனித்துப் போட்டியிடும்
இலங்கையில் 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பு மாற்றத்தின் பின் நிகழும் ஏழாவது பாராளுமன்றத்துக்காக தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை, சுதந்திர கட்சியுடனோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடனோ சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளமுடியாது எனவும் குறிப்பிட்டார். எனினும் குறிப்பிட்ட கட்சிகளிடமிருந்து, அவ்வாறான உத்தியோகபூர்வ அழைப்புக்கள் எவையும் இதுவரை கூட்டமைப்புக்கு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply