நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக கிழக்கு மாகாண சபையின் அமைச்சை கைவிடும் ஹிஸ்புல்லா

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தனது கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சு பதவியில் இருந்து விலகவுள்ளார்.

இம்மாதம் 26 ம் திகதி தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்குவார் என ஹிஸ்புல்லா அறிவித்துள்ளார்.

பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் 2008 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா அவர்கள் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டார் என்பதும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply