நலன்புரி முகாம் மாணவர்களுக்கு புலம்பெயர்தோரே உதவ வேண்டும்
இடம்பெயர்ந்து வவுனியாவிலும் அதனைச் சுற்றிலும் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மீள்குடியேற்றம் நிகழும்வரை தங்கள் குழந்தைகளின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை கொண்டவர்களாவே உள்ளனர்.
அவர்களின் அக்கறை காரணமாக, வடக்கு மாகாண ஆளுனர் சந்திரசிறியின் பணிப்பின் பேரில் கடந்த திங்கட்கிழமை வவுனியாவில் உள்ள காமினி வித்தியாலத்தில் தற்காலிக பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் நாளே 1600-ற்கும் மேற்பட்ட பிள்ளைகள் அந்த பாடசாலையில் இணைந்திருந்தனர்.
அதே வேளை வவுனியாவில் ஏனைய தூரப்பகுதிகளில் இருக்கும் முகாம்களில் உள்ள பிள்ளைகளின் நலன்கருதி முகாம்களை அண்டிய பகுதிகளிலும் தற்காலிக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இப்பாடசாலைகளில் மாணவர் பயன்படுத்துவதற்கென சுமார் இரண்டாயிரம் மாணவருனக்கான தளபாடங்களை மத்திய கல்வி அமைச்சில் இருந்து மாகாண கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.
The United Nations Children’s Fund [UNICEF] நிறுவனம் ஒரு தொகுதி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் அடங்கிய பொதியினை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
எனினும் இம்மாணவர்களின் கல்வி கற்றலுக்கான அடிப்படைத் தேவையான எழுது கருவிகள், குறிப்பேடுகள் மற்றும் பயிற்சி புத்தகங்கள் ஆகியவற்றிற்கு பாரிய அளவில் பற்றாக்குறை நிலவுகின்றது.
இந்த பற்றாக்குறையை நிரவும் வகையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள சமூக ஆர்வலர்களும், நலன் விரும்பிகளும் மற்றும் சமூக அமைப்புகளும் தாராளமாக உதவ முன்வர வேண்டுமென இப்பிள்ளைகளுக்கான கற்பித்தலை முன்னெடுக்கும் கல்விச் சமூகத்தினர் புதினப்பலகையிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply