தனுனவின் தாயின் வங்கிப் பெட்டகத்திலிருந்து ஏழுரைக் கோடி
ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவின் தாயார் அசோக திலகரத்னவிடம் காவற்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். காவற்துறை ஊடகப்பேச்சாளர் எஸ்.பி. பிரசாந்த ஜயகொடி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுக திலகரத்னவின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிப் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த 75 மில்லியன் ரூபா பணத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனார்.
5 இலட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், 106 ஸ்டேர்லிங் பவுண்கள் மற்றும் 15 மில்லியன் ரூபா ஆகியன இவரது கணக்கிலிருந்து கண்டுபிடிக்கப்ப ட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். நீதிமன்ற அனுமதியுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக விசேட ஊடக வியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில்,
சி.ஐ.டியினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கொழும்பிலுள்ள தனியார் வங்கியின் நான்கு பாதுகாப்பு பெட்டகங்களை சோதனையிட சி.ஐ.டியினர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றில் தேடுதலுக்கான அனுமதியைப் பெற்றே இந்த நடவடிக்கையில் இறங்கியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற அனுமதி பெற்றதையடுத்து சி.ஐ.டியினர் நான்கு பெட்டகங்களையும் சோதனையிட்டுள்ளனர். இதன் போதே தனுன திலக்கரத்னவின் தாயாரான அசோக்கா திலகரத்தனவின் வங்கிப் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து பெருந் தொகையான பணத்தை கண்டுபிடித்துள்ளனர் என்றார். இதேவேளை சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்னவை கைது செய்வதற்கான பிடி விறாந்து ஒன்றை கோட்டை மஜிஸ்திரேட் நீதவான் நேற்று பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கைப்பற்றப்பட்ட பணம், குறித்த வங்கியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அந்தப் பணத்தை நீதிமன்ற கணக்கிற்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக குற்றப்புலனா ய்வு பிரிவு பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
இதேவேளை, மத்திய வங்கியின் நிதிப்புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிப்பரிமாற்று கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு மேலதிக விசாரணைக்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். குறிப்பிட்ட பெருந்தொகையான பணம் நாட்டுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது? எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது?
இது தொடர்பான விசாரணைகளை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளவுள்ளனர். தனுன திலகரத்தனவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் மூலம் தனுக திலகரத்ன முன்பிணை கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதனடிப்படையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply