பொன்சேகாவின் கைது அரசியல் பழிவாங்கலல்ல
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட தற்கான காரணத்தை மகாநாயக்க தேரர்க ளுக்குத் தெளிவுபடுத்துவதற்கான ஏற்பாடு களை அரசாங்கம் மேற்கொண்டுள்ள தாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அதேவேளை, பொன்சேகா மீதான விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு இரண்டொரு தினங்களில் தெளிவுபடுத்தப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் குறிப் பிடுகையில்; அரசாங்கமோ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ அரசியல் பழிவாங்கலுக்காக சரத் பொன்சேகாவைக் கைது செய்யவில்லை. அவர் இராணுவ சட்டங்களை மீறியுள்ளார். இராணுவ ஆட்சியொன்றை நாட்டில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இத்தகைய சதி காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க் கட்சிகள் இதனை அரசியல் பழிவாங்கலாக உருவகப்படுத்தி வெளிநாடு களில் பிரசாரங்களை முன்னெடுக்கின்றன.
ஜே. வி.பி,. ஐ.தே. க போன்ற கட்சிகள் இன்று பெரும் அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பதில் இரு கட்சிக ளுமே இதுவரை எந்தத் தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை.
எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்ற முடிவும் இன்னும் எட்டப்பட்டவை. இந்நிலையில் தேர்தல் தோல்விகளை மூடிமறைக்கவே பல்வேறு பிரசாரங்களை அக்கட்சிகள் முன்னெடுக்கின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை கண்டி, ஸ்ரீதலதா மாளிகையின் மகாமலுவ வளாகத்தில் இருந்து இம்மாதம் 18ஆம் திகதி மகா சங்கத்தினர் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஒன்றுகூடி கலந்துரையா டவுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் எந்தவொரு நபருக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் ஆதரவு வழங்கும் நடவடிக்கை அல்ல என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவே ஸ்ரீசித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply