லியாம் பொக்ஸ் மகிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் சந்திப்பு
பிரித்தானியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி லியாம் பொக்ஸ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லகாம, அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜெயசிங்க ஆகியோரும் சிறிலங்கா அரச தரப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
கலாநிதி லியாம் பொக்ஸ் பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு அமைச்சராக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்ற சூழலில், கலாநிதி லியாம் பொக்ஸ் ஆட்சியில் முக்கிய இடத்தை வகிப்பார் என நம்பப்படுகிறது.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய வர்த்தக சம்மேளனத்தைச் சேர்ந்த முதலீட்டுக் குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பில் கனடாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள சிறுவர்களின் மேம்பாட்டுக்காக சேகரித்த 20,000 அமெரிக்க டொலர் நிதியினை அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
அதேவேளை, வடக்கு – கிழக்கில் தமது முதலீடுகளை மேற்கொள்ள புலம் பெயர்ந்து வாழும் முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் எனவும் இக்குழுவினரிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply