தமிழக செம்மொழி மாநாட்டில் 91 இலங்கையர் பங்கேற்பு : கருணாநிதி

தமிழகத்தில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில், தமிழாராய்ச்சிக்காக 49 நாடுகளில் இருந்து 7256 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கோயபுத்தூரில் நடைபெறவுள்ள இந்த செம்மொழி மாநாட்டில், இலங்கையில் இருந்து 91 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் அவர்களில் 1500 பேர் தமது ஆராய்வுகளை மாநாட்டின் போது சமர்ப்பிப்பர் எனக் கூறப்படுகிறது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி, சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

கோயபுத்தூரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இலங்கையில் இருந்து 91 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் கனடாவில் இருந்து 23 பேரும், அமெரிக்காவில் இருந்து 44 பேரும் , அவுஸ்திரேலியாவில் இருந்து 15 பேரும், இங்கிலாந்தில் இருந்து 18 பேரும், சீனாவில் இருந்து 4 பேரும் கலந்து கொள்கின்றனர். ம்ற்றும் 6,800 பேர் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையில் தமிழ் இணைய மாநாட்டுக்காக 75 தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆக்கங்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டில் அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் கலந்து கொள்ளவுள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார். மாநாடு நடைபெறவுள்ள கோயபுத்தூர் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி மற்றும் ஏற்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply